Enable Javscript for better performance
நயினார்பத்தில் குடிநீர்த் தொட்டி திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    :உடன்குடி அருகே நயினார்பத்தில் குடிநீர்த் தொட்டி திறக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

    உடன்குடி ஊராட்சி ஒன்றியம் நயினார்பத்து ஊராட்சியில் பொது நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி திறக்கும் விழாவுக்கு நயினார்பத்து ஊராட்சித் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் சொ.உலகநாதன் குடிநீர்த் தொட்டியை திறந்து வைத்தார். உடன்குடி ஒன்றிய அதிமுக செயலர் அம்மன் நாராயணன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai