Enable Javscript for better performance
நாசரேத்தில் வருடாந்திர விற்பனை விழா- Dinamani

சுடச்சுட

    

    :நாசரேத் தூய யோவான் கதீட்ரல் வளாகத்தில் ஜி.எம்.எஸ்., ஐ.எம்.எஸ். சார்பில் நல உதவிகள் வழங்குவதற்காக வருடாந்திர விற்பனை விழா நடைபெற்றது.

    மலைவாழ் மக்கள், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் நலனுக்காக அவர்களின் மருத்துவ உதவிகள், கல்வி உதவிகள் வழங்குவதற்காக ஆண்டுதோறும் ஜி.எம்.எஸ். மற்றும் ஐ.எம்.எஸ். நிறுவனங்கள் இணைந்து விற்பனை விழாவை நடத்தி அதன் மூலம் வரும் பணத்தை வைத்து நலத்திட்ட உதவிகள் செய்துவருகின்றனர். இந்தாண்டும்  நாசரேத் வட்டாரத்துக்குள்பட்ட ஆர்ட் இன்டஸ்ட்ரியல் பள்ளி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, நர்சிங் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம், புனித லூக்கா சமுதாயக் கல்லூரி, ஆழ்வார்திருநகரி, கீழவெள்ளமடம், உடையார்குளம், பிள்ளையன்மனை, வாழையடி, நாசரேத், முதலைமொழி ஆகிய சேகரங்கள் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு விற்பனை விழா நடைபெற்றது. நாசரேத் ஆர்ட் இன்டஸ்ட்ரியல் பள்ளி இயக்குநர் ஞானதிலகராய் தலைமை வகித்து  திறந்து வைத்தார். கடந்த ஆண்டு இந்தியாவிலுள்ள மலைவாழ் மக்கள், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் நலனுக்காக ஜி.எம்.எஸ். மற்றும் ஐ.எம்.எஸ். நிறுவனங்கள் இணைந்து நடத்தியதின் மூலம் ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai