Enable Javscript for better performance
பஸ்-பைக் மோதல்: லாரி ஓட்டுநர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் தனியார் பள்ளி பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற லாரி ஓட்டுநர் வெள்ளிக்கிழமை இறந்தார்.

    தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் காளியப்பன் (43). லாரி ஓட்டுநர். இவர், தனது மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டை சாலையில் சிதம்பரநகர் சந்திப்பு பகுதியில் வெள்ளிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த தனியார் பள்ளிக்குச் சொந்தமான பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் காயமடைந்த காளியப்பன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

    இதுகுறித்து வழக்குப் பதிந்த தென்பாகம் போலீஸார்  பஸ் ஓட்டுநரான தூத்துக்குடி காமராஜர் நகரைச் சேர்ந்த சண்முகத்தை (65) கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai