Enable Javscript for better performance
புன்னை நகரில் இன்று இலவச மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    புன்னை நகரில் இன்று இலவச மருத்துவ முகாம்

    By திருச்செந்தூர்,  |   Published on : 24th August 2013 04:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர் வட்டம், புன்னை நகரில் இம்மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

    சென்னை ஹோட்டல் சரவண பவன் நிறுவனர் பி.ராஜகோபால் மற்றும் அவரது மகன்கள் மற்றும் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை இணைந்து புன்னைநகர் வனதிருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் இம்மருத்துவ முகாமை நடத்துகின்றனர். இதுகுறித்து முகாம் அமைப்பாளர்கள் கே.வைத்திசுப்பிரமணியன், விஜயராகவன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இரண்டு நாள்கள் நடைபெற உள்ள மருத்துவ முகாமில் இதய நலத்துறை தலைவர் மருத்துவர் எஸ்.தணிகாசலம், மருத்துவக் கல்லூரித் தலைவர் எஸ்.அனந்தன், சிறுநீரக நோய்த்துறை தலைவர் பி.செüந்திரராஜன், முடநீக்கியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆர்.துரைகுமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், துணை மருத்துவர்கள் பங்கேற்கின்றனர். எனவே பொதுமக்கள் இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai