Enable Javscript for better performance
மாற்றுத்திறனாளி : மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் அருகேயுள்ள கொம்மடிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    முகாமுக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுடலைமணி தலைமை வகித்தார். அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட அலுவலர் குருவையா தொடங்கி வைத்தார். காது, மூக்கு, தொண்டை மருத்துவர் ஆத்திக்குமார், மனநோய் மருத்துவர் குருமூர்த்தி, கைகால் இயக்க மருத்துவர் ராஜாஆசிக்அலி, கண் மருத்துவர் ஸ்டெல்லாமேரி, கண் பரிசோதகர் அருள்குமார் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்கப் பரிந்துரை செய்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai