Enable Javscript for better performance
வங்கிக் கணக்கு தொடங்கும் முகாம் - Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் வங்கிக் கணக்கு தொடங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு கல்லூரிச் செயலர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கதம்பராஜன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கோவில்பட்டி கிளை அலுவலர்கள் வங்கிக் கணக்கு தொடங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர் சுமார் 70 மாணவர், மாணவிகளுக்கு புதிய வங்கிக் கணக்கை தொடங்கினர். ஏற்பாடுகளை ஆங்கிலத் துறைப் பேராசிரியர் கற்குவேல்ராஜ் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai