Enable Javscript for better performance
விஜயராமபுரம் கோவிலில் கோலப்போட்டி- Dinamani

சுடச்சுட

    

    விஜயராமபுரம் கோவிலில் கோலப்போட்டியில் வென்றவர்களுக்கு அய்யா வைகுண்டரின் அருளிசை பாடகர் சிவசந்திரன் பரிசுகள் வழங்கினார்.

    சாத்தான்குளம் அருகேயுள்ள விஜயராமபுரம் தேவி ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் வட்டார அளவிலான கோலப்போட்டிகள் நடைபெற்றன. இதில் 187 பேர் பங்கேற்றனர். போட்டிகளுக்கு  சாத்தான்குளம் முன்னாள் பேரூராட்சித் தலைவர் பி.தங்கத்தாய், ஸ்ரீமாரியம்மன் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா உள்ளிட்ட 3 பேர் நடுவர்களாக இருந்து சிறந்த கோலங்களை தேர்வு செய்தனர். இதில் அதே ஊரைச் சேர்ந்த சுமதி, கவிதா குழுவினருக்கு முதல்பரிசான தலா ஒரு ஜோடி கம்மல் கிடைத்தது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு சாத்தான்குளம் பேரூராட்சித் தலைவர் செ.ஜோசப் தலைமை வகித்தார். தச்சமொழி ஊராட்சித் தலைவர் சண்முகக்கனிசக்திவேல் முன்னிலை வகித்தார். கோவில் தர்மகர்த்தா வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai