Enable Javscript for better performance
விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மெட்ராஸ் கபே திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருச்செந்தூர் பேரூராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்டச் செயலர் முரசு தமிழப்பன் தலைமை வகித்தார். தமிழ்த்தேசிய விடுதலைப் பேரவை மாவட்டச் செயலர் சி.பா.பாரிவள்ளல், மாவட்ட துணைச்செயலர் இல.பேச்சிமுத்து, முற்போக்கு மாணவர் கழக மாவட்டச் செயலர் ஜெ.தர்மராஜ், கருத்தியல் பரப்பு மைய மாவட்டச்செயலர் இர.பு.தமிழ்க்குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்ட துணைச்செயலர் புரட்சியாளன், ஒன்றிய துணைச்செயலர்கள் மு.தமிழ்பரிதி, ஆ.சங்கத்தமிழன், நகர அமைப்பாளர் பே.சின்னத்துரை, இளஞ்சிறுத்தைகள் உடன்குடி ஒன்றியப் பொருளாளர் டேவிட் ஜான்வளவன், தொழிலாளர் விடுதலை முன்னணி ஒன்றியச்செயலர் பெரு.மகராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai