Enable Javscript for better performance
விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    எப்போதும்வென்றானில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த தொழிலாளி வியாழக்கிழமை இறந்தார்.

    எப்போதும்வென்றான் முத்துநகரைச் சேர்ந்தவர் சுந்தரம்(50). கூலித் தொழிலாளி.

     வியாழக்கிழமை காலை எப்போதும்வென்றான் கூட்டுறவு சங்கம் முன் சாலையைக் கடக்க முயன்ற இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவர் பலத்த காயமடைந்தார்.

    தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற எப்போதும்வென்றான் போலீஸார் அவரை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai