Enable Javscript for better performance
கோவில்பட்டியில் சங்கடஹர சதுர்த்தி விழா - Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோவிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

      இதையொட்டி, கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் சன்னதி முன்பு கணபதி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, கும்ப கலச பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து, விநாயகருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

        தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்திருந்தார்.

      விழாவில், கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai