Enable Javscript for better performance
தாது மணல் முறைகேடு: சிபிஐ விசாரிக்க வேண்டும் - Dinamani

சுடச்சுட

    

    தாது மணல் முறைகேடு: சிபிஐ விசாரிக்க வேண்டும்

    By தூத்துக்குடி  |   Published on : 25th August 2013 04:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் முறைகேடு தொடர்பான புகார் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை நடத்த வேண்டும் என மீனவர் ஐக்கிய முன்னணி வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட மீனவர் ஐக்கிய முன்னணி செயலர் சுபாஷ் சனிக்கிழமை அளித்த பேட்டி:

    தாது மணல் முறைகேடாக அள்ளப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக அரசால்  நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவினர் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி  மாவட்டங்களிலும் ஆய்வு நடத்த வேண்டும் என, மீனவர் ஐக்கிய முன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டபோதிலும் இதுவரை எந்தவித பதிலையும் அரசுத் தரப்பு தெரிவிக்கவில்லை.

    எனவே, தாது மணல் முறைகேடு தொடர்பாக மத்திய அரசு உடனடியாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, உள்துறை அமைச்சகத்துக்கும், சிறப்பு புலனாய்வுத் துறைக்கும் மனு அனுப்பியுள்ளோம். அரசு விதிப்படி கடலோரப் பகுதியில் ஓரடிக்கு மேல் தாது மணல் அள்ளக்கூடாது.  கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவில்தான் மணல் அள்ள வேண்டும். ஓரடிக்குள் மணல் அள்ளிவிட்டு, அதனை மீண்டும் சமநிலைப்படுத்த வேண்டும், மணல் அள்ள இயந்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது என அரசு உத்தரவு உள்ளது. ஆனால், இந்த விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. தாது மணல் முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார் அவர்.

    பேட்டியின்போது, மீனவர் ஐக்கிய முன்னணி அமைப்பின் மாவட்டத் தலைவர் சேவியர் வாஸ், பொருளாளர் ஜாய் காஸ்ட்ரோ, துணைத் தலைவர்கள் ஏடிஎஸ் அருள், சகாயராஜா, இசக்கிமுத்து, இணைச் செயலர்கள் ஜெயந்த்ராஜ், மாரியப்பன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரிச்சர்டு தேவசகாயம் ஆகியோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai