Enable Javscript for better performance
திருச்செந்தூர் கோவில் ஆவணித் திருவிழா ஏற்பாடுகள் - Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் கோவில் ஆவணித் திருவிழா ஏற்பாடுகள்

    By திருச்செந்தூர்  |   Published on : 25th August 2013 04:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆவணித் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

    இத்திருக்கோவிலில் ஆவணித் திருவிழா திங்கள்கிழமை (ஆக. 26) கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    திருவிழாவுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம்  திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ப.நல்லசிவம் தலைமையில் நடைபெற்றது.

    காவல் துணை கண்காணிப்பாளர் ஞானசேகரன், திருக்கோவில் அலுவலக கண்காணிப்பாளர் ப.ராமசாமி, திருச்செந்தூர் பேரூராட்சித் தலைவர் மு.சுரேஷ்பாபு, பேரூராட்சி செயல் அலுவலர் கொ.ராஜையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பக்தர்கள் வசதிக்காக பேரூராட்சி சார்பில் 8 இடங்களில் குடிநீர்ப் பந்தல்கள் அமைப்பது, திருவிழா நாள்களில் உடனுக்குடன் குப்பைகள் அகற்றப்பட்டு, சுகாதாரத் துறை சார்பில் கொசு மருந்து தெளிக்கப்படும்.

    திருவிழாக்காலங்களில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும். 7-ம் திருவிழாவன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி வழியாக திருச்செந்தூருக்கு 40 சிறப்பு பேருந்துகளும், தயார் நிலையில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கோவில் வளாகம் மற்றும் நகரில் நிறுத்தப்படும். பாதுகாப்புப் பணியில் 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினரை ஈடுபடுத்துவது என்பன உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்கப்பட்டது.

    கூட்டத்தில் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் செ.பிரதாபன், திருக்கோவில் கண்காணிப்பாளர்கள் சுப்பையன், ரோஷினி, கோமதி, கணேசன், உள்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், விடுதி மேலாளர் சிவநாதன், தீயணைப்பு நிலைய அலுவலர் ந.நட்டார் ஆனந்தி, மின்வாரிய இளநிலை பொறியாளர் எம்.குமார், சுகாதார ஆய்வாளர்கள் ஜெய்சங்கர், சுப்பிரமணியன், குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், தொலைத்தொடர்பு கோட்ட அலுவலர் தேவதாஸ், மீன்வளத்துறை அலுவலர் பிரதீப்குமார், தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநிலத் தலைவர் மோகனசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai