Enable Javscript for better performance
மின் உதவியாளர் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    மின் உதவியாளர் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு

    By தூத்துக்குடி  |   Published on : 25th August 2013 04:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

      மின்வாரியத்தில் காலியாக உள்ள மின் உதவியாளர் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல் குறித்த விவரம் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கா. சண்முகசுந்தர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் உதவியாளர் (பயிற்சி) பணிக் காலியிடத்துக்கான பட்டியல் பரிந்துரை செய்ய சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநரால் மாநில பதிவுமூப்பு உத்தேச பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

    மின் உதவியாளர் (பயிற்சி) பணிக்கான கல்வித் தகுதியாக வயர்மேன், எலக்ட்ரீசியன் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களிலிருந்து பெறப்பட்ட கல்விச் சான்றிதழ் தேவை. மேலும், 1.7.2012-க்குள் 57 வயது பூர்த்தியடைந்திருக்கக் கூடாது.இந்தப் பணிக்கான பதிவுமூப்பு உடையவர்களின் உத்தேச பதிவு மூப்பு பட்டியல் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    பதிவுதாரர்கள் பதிவுமூப்புக்குள் இருந்து பட்டியலில் விடுபட்டு இருப்பின் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 26) முதல் இரண்டு நாள்களுக்குள் நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai