Enable Javscript for better performance
மேடைக் கலைஞர்கள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    மேடை மெல்லிசைக் கலைஞர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும், ஓய்வூதியமாக ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் மேடைக் கலைஞர்கள் சனிக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

     தூத்துக்குடி மாவட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் சங்கம் சார்பில் பாளையங்கோட்டை சாலையில் சிதம்பரநகர் விலக்கு பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு, சங்கத் தலைவர் மா.சீலன் தலைமை வகித்தார். செயலர் ஜஸ்டின், பொருளாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     மேடை மெல்லிசைக் கலைஞர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும், 58 வயது நிரம்பிய கலைஞர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும், மேடைக் கலைஞர்களுக்கு இலவச பஸ்பாஸ் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட உதவி ஆகியவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது.

     உண்ணாவிரதத்தில் பங்கேற்ற மேடை மெல்லிசைக் கலைஞர்கள் இசைக்கருவிகளை வாசித்தபடி திரைப்பட பாடல்கள் மற்றும் தேசப் பக்திப் பாடல்களை பாடினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai