Enable Javscript for better performance
அதிமுக மக்களோடு இணைந்து செயல்படுகிறது: அமைச்சர் வைகைச்செல்வன்- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக மக்களோடு இணைந்து செயல்படுகிறது: அமைச்சர் வைகைச்செல்வன்

    By தூத்துக்குடி,  |   Published on : 26th August 2013 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களோடு இணைந்து செயல்படும் ஒரே இயக்கம் அதிமுக மட்டும்தான் என்றார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் மாநிலச் செயலருமான வைகைச்செல்வன்.

    தூத்துக்குடி மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக அரசின் சாதனை விளக்கப்பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

    அதிமுகவில்,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தொடங்கப்பட்டபோது எதிர்க்கட்சியினர் எள்ளி நகையாடினர். ஆனால், இன்றையதினம் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசறை செயல்பட்டு வருகிறது.

    பிரான்ஸ் நாட்டில் சீக்கிய இளைஞர் ஒருவர் பாதிக்கப்பட்டபோது நேரடியாக அங்கு சென்ற பிரதமர், இலங்கையில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது மெüனமாக இருந்தது ஏன்? அவரை அப்போது ஆட்சியில் இருந்த திமுக ஏன் வலியுறுத்தவில்லை.

    நமது நாட்டில் பல்வேறு மாநிலங்களில் ஆளும் கட்சிக்கு எதிராக அலை வீசிக் கொண்டிருக்கும் நிலையில் ஆட்சிக்கு ஆதரவாக அலை வீசிக் கொண்டிருப்பது அதிமுக ஆட்சி செய்யும் தமிழகத்தில் மட்டும்தான்.

    ஏனென்றால், மக்களோடு இணைந்தும், இசைந்தும் செயல்படும் ஒரே இயக்கம் அதிமுக மட்டும்தான்.பாசறை நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று மாதத்துக்குள் புதிதாக 25,000 உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். அடுத்த பிரதமராக வரும் வாய்ப்பு தமிழக முதல்வர் ஜெயலிலதாவுக்கு இருப்பதாக பத்திரிகைகளும், அரசியல் விமர்சகர்களும் கூறி வருகின்றனர்.

    எனவே  40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்து முதல்வர்  ஜெயலலிதாவை இந்தியாவின் பிரதமராக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில், அதிமுக மாவட்டச் செயலரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன், எம்.எல்.ஏ.க்கள் சி.த. செல்லப்பாண்டியன், கடம்பூர் ராஜு, ஜீ.வி. மார்க்கண்டேயன், முன்னாள் மத்திய அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனம், மீனவரணி இணைச் செயலர் ஜெனிபர் சந்திரன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலர்கள் பி.ஆர். மனோகரன், ஆர்.எஸ். முத்துசாமி, மாவட்டச் செயலர் துறையூர் கணேசன், வழக்குரைஞர் அணிச்செயலர் யு.எஸ். சேகர், விவசாய அணிச்செயலர் அக்ரி பெருமாள், இரா. ஹென்றி,ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தலைவர் க. விஜயகுமார், தூத்துக்குடி ஒன்றிய விவசாய அணிச் செயலர் விபிஆர் சுரேஷ்  கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai