Enable Javscript for better performance
அறிவியல் ஆய்வு விருது: உடன்குடி பள்ளி மாணவி தேர்வு - Dinamani

சுடச்சுட

    

    அறிவியல் ஆய்வு விருது: உடன்குடி பள்ளி மாணவி தேர்வு

    By உடன்குடி  |   Published on : 26th August 2013 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற உடன்குடி சைவப்பிரகாச வித்யாசாலை பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்று மாநில புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.

    தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் தூத்துக்குடி மரியன்னை பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட உடன்குடி சைவப்பிரகாச வித்யாசாலை பள்ளி மாணவி பாத்திமா சிகானா உருவாக்கிய ஆட்டோமேட்டிக் அக்ரிகல்ச்சர் பம்ப் என்ற கருவி மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றது.  வெற்றிபெற்ற மாணவி பாத்திமா சிகானாவை உடன்குடி பேரூராட்சித் தலைவி ஆயிஷா உம்மாள், பள்ளித் தலைமையாசிரியர் பிரின்ஸ், ஆசிரியர்கள் மகாலிங்கம், செல்வி, மல்லிகா ஆகியோர் பரிசு வழங்கிப்

    பாராட்டினார்கள்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai