Enable Javscript for better performance
உடன்குடி அருகே 4 வீடுகள் தீக்கிரை- Dinamani

சுடச்சுட

    

    உடன்குடி அருகேயுள்ள வேதகோட்டவிளையில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட தீவிபத்தில் 4 வீடுகள் சேதமடைந்தன.

    வேதகோட்டவிளை வேதக் கோவில் தெருவில் உள்ள வீட்டில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீவிபத்து நேரிட்டது. அப்போது அருகருகே இருந்த செ. அன்னமரிஅம்மாள் (62), பி. செல்வின் (58), ஞா. சகாய நாடார் (65), சா. ரூபலா (30) ஆகியோரது வீடுகளும் தீக்கிரையாகின. இதில் வீடுகளிலிருந்த பீரோ, கிரைண்டர், கட்டில் என சுமார் ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.

    உடன்குடி வருவாய் ஆய்வாளர் இசக்கிதுரை, உடன்குடி கிராம நிர்வாக அலுவலர் அமுதா, நடராஜன், குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளர் முத்துராம் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai