Enable Javscript for better performance
கோவில்பட்டியில் கஞ்சிக் கலய ஊர்வலம் - Dinamani

சுடச்சுட

    

    :கோவில்பட்டியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கஞ்சிக் கலய ஊர்வலம் நடைபெற்றது.

    கோவில்பட்டி இந்திரா நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சார்பில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து உலக மக்களின் நலன் கருதியும், மழை வேண்டியும் கஞ்சிக் கலய ஊர்வலம் நடைபெற்றது.

    கோவில்பட்டி காந்தி நகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தை கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூர் செ.ராஜு தொடங்கி வைத்தார். ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வழிபாட்டு மன்றம் வந்தடைந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai