Enable Javscript for better performance
கோவில்பட்டி: எம்.ஜி.ஆர். வெற்றி ஜோதி தொடர் ஓட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி: எம்.ஜி.ஆர். வெற்றி ஜோதி தொடர் ஓட்டம்

    By கோவில்பட்டி,  |   Published on : 26th August 2013 03:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் நடைபெறும் அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவில்பட்டி இலுப்பையூரணியிலிருந்து தூத்துக்குடி வரை எம்.ஜி.ஆர். வெற்றி ஜோதி தொடர் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கோவில்பட்டியையடுத்த வடக்கு இலுப்பையூரணியில் தொடங்கிய இந்த ஜோதி தொடர் ஓட்டத்துக்கு இளைஞர் பாசறையைச் சேர்ந்த சுந்தரபாண்டி தலைமை வகித்தார். மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலரும்,எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் செ.ராஜு   தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநாட்டுத் திடலை சென்றடைந்த இந்த ஜோதியை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலருமான வைகைச்செல்வன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான சண்முகநாதன் ஆகியோர் பெற்றுக்

    கொண்டனர்.

    தொடக்க விழாவில், கோவில்பட்டி ஒன்றிய அதிமுக செயலர் அய்யாத்துரைப்பாண்டியன், முன்னாள் நகரச் செயலர் விஜயபாண்டியன், நகர்மன்ற உறுப்பினர் ஜெமினி என்ற அருணாசலசாமி, ஒன்றிய மாணவரணிச் செயலர் செண்பகராமன், நகர மாணவரணிச் செயலர் பாபு, அதிமுக சட்டப்பேரவைத் தொகுதி இணைச் செயலர் சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், ஊராட்சி செயலர் ரமேஷ், நகர எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர் கணேசன், கிளைச் செயலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கோவில்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பி.கே.

    நாகராஜன் செய்திருந்தார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai