Enable Javscript for better performance
சாத்தான்குளம்: மின்ஆளுகை பொதுசேவை மையம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம்: மின்ஆளுகை பொதுசேவை மையம் தொடக்கம்

    By சாத்தான்குளம்  |   Published on : 26th August 2013 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    :சாத்தான்குளத்தில் மின் ஆளுகை திட்ட பொது சேவை மையத்தை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தொடங்கி வைத்து ரூ.2.30 லட்சம் கடனுதவிகளை

    வழங்கினார்.

    சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இத்திட்ட தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் தலைமை வகித்தார். தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் க. பாண்டியன் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் கோட்டாட்சியர் ப.கொங்கன் வரவேற்றார்.

    சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் இத்திட்டத்தை தொடக்கி வைத்து, விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

    பின்னர் விவசாய கூட்டுப் பொறுப்புக் குழுவுக்கு முருங்கை விவசாயத்துக்கு ரூ.75 ஆயிரம், மகாலட்சுமி மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ.1 லட்சம், இருவருக்கு வீடு அடமான கடன் ரூ. 55 ஆயிரம் என மொத்தம் ரூ.2.30 லட்சம் கடனுதவிகளை வழங்கி அவர் பேசினார்.

    கூட்டுறவு சங்கத் தலைவர் ஒய். சாமுவேல், ஒன்றியக்குழுத் தலைவர் ஒய்.எஸ். சுரேஷ்குமார், ஒன்றிய அதிமுக செயலர் ஆர்.எஸ்.எஸ். ராஜ்மோகன், நகரச் செயலர் என்.எஸ். செல்லத்துரை, ஒன்றிய ஜெயலலிதா பேரவைத் தலைவர் எஸ்.தங்கப்பாண்டி, செயலர் எஸ். முருகேசன், ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலர் எஸ்.சந்திரராஜ், ஒன்றிய சமக செயலர் ஜான்ராஜா, சாத்தான்குளம் வட்டாட்சியர் பொ. மிகாவேல் ஞானதீபம், மண்டல துணை வட்டாட்சியர் து. செந்தூர்ராஜன், கூட்டுறவு சங்க, அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

     கூட்டுறவு சங்க துணைத் தலைவர் சி.ஜோசப் அலெக்ஸ் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai