Enable Javscript for better performance
தூத்துக்குடி, திருச்செந்தூரில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி, திருச்செந்தூரில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா

    By கோவில்பட்டி  |   Published on : 26th August 2013 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி, திருச்செந்தூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் விஜயகாந்தின் பிறந்த நாள் விழாவையொட்டி கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் உள்ள காளியம்மன் கோவில் முன்பிருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலைச் சென்றடைந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து, கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன் பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    புதூர் ஒன்றியம் நாகலாபுரம், விளாத்திகுளம் ஒன்றியம் அரசங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    எட்டயபுரத்தில் உள்ள டிரம் டிரஸ்ட் மன வளர்ச்சி குன்றியோர் முதியோர் இல்லம், கடம்பூர் டியர் இந்தியா ஆதரவற்றோர் இல்லம், கயத்தாறு ஒன்றியத்தில் கிரஷ் இந்தியா ஆதரவற்றோர் இல்லம், கோவில்பட்டி ஒன்றியத்தில் ஹோப் மிஷன் ஹோம் ஆதரவற்றோர் இல்லம், கழுகுமலை லூயிசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஆகியோருக்கு உணவுகள் வழங்கப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து, கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்டச் செயலர் பொன்ராஜ் தலைமை வகித்தார்.

    மாவட்ட அவைத் தலைவர் செண்பகராஜன், மாவட்டப் பொருளாளர் உதயக்குமார், ஒன்றியச் செயலர்கள் சாமி ரமேஷ் (கோவில்பட்டி), ஜெயக்குமார் (ஓட்டப்பிடாரம்), மோகன்தாஸ் (புதூர்), தங்கச்சாமி (விளாத்திகுளம்), கிருஷ்ணமூர்த்தி (கயத்தாறு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கர், தலைமைக் கழக பேச்சாளர்கள் நாகராஜன், புரட்சிராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர்கள் முத்துச்செல்வம், சீனிராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சோலைராஜ், உமாசங்கர், முருகன், மாவட்ட துணைச் செயலர்கள் சண்முகசுந்தரம், முத்துமாலை, அழகர்சாமி, ராஜன் உள்பட கோவில்பட்டி, விளாத்திகுளம், கயத்தாறு, புதூர், ஓட்டப்பிடாரம் ஒன்றிய மற்றும் எட்டயபுரம், கழுகுமலை, கயத்தாறு, புதூர், கடம்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கோவில்பட்டி நகரச் செயலர் சண்முகராஜா வரவேற்றார். நகர மகளிரணி துணைச் செயலர் ஜெயக்கொடி நன்றி கூறினார்.

    திருச்செந்தூர்:திருச்செந்தூர் அருகே மேலப்பள்ளிப்பத்து கிராமத்தில் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு தே.மு.தி.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    திருச்செந்தூர் ஒன்றிய தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மேலப்பள்ளிப்பத்து கிளைச்செயலர் சித்திரைலிங்கம் தலைமை வகித்தார்.

     ஒன்றிய அவைத்தலைவர் பூச்சிக்காடு சுரேஷ் முன்னிலை வகித்தார். ஒன்றியச்செயலர் எஸ்.எ.செந்தில்குமார் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வார்டு அவைத்தலைவர் ராஜ், முன்னாள் இளைஞரணிச் செயலர் பாரத், மாவட்டப் பிரதிநிதி பேராச்சிசெல்வன், சுல்தான், ஒன்றிய மீனவரணி துணைச் செயலர் ஜென்ஸன், ஒன்றிய இளைஞரணிச் செயலர் சார்லின், நகரத் தலைவர் ராமன், நகரச் செயலர் சேகர், பொருளாளர் வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மேலும், திருச்செந்தூர் அமலிநகரில் கட்சிக் கொடி ஏற்றி பதுவா முதியோர் இல்லத்தில் உள்ள முதியோருக்கு இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

    சாத்தான்குளம்:சாத்தான்குளத்தில் ஒன்றிய நகர தேமுதிக சார்பில்  விஜயகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    பழைய பஸ் நிலையம் காமராஜர் சிலை முன் நடைபெற்ற விழாவுக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ். ஸ்டீபன் மரியதாஸ் தலைமை வகித்தார். நகரச் செயலர் எஸ்.ஆர். குமார், ஒன்றிய துணைச் செயலர் எஸ். லூக்காஸ், நகர துணைச் செயலர் எஸ். முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     இதில் நகரத் தலைவர் ஜி.எஸ். ரவி, நகரப் பொருளாளர் எஸ்.ஏ. அப்பாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ஒன்றியச் செயலர் முருக செல்வம் தலைமையில் அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலையணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.

     இதில் ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவம், ஒன்றியப் பொருளாளர் லெனின், ஒன்றிய துணைச் செயலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    உடன்குடி:உடன்குடி அருகே மெய்யூரில் கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாநிலப் பேச்சாளர் நூர்ஷா தலைமை வகித்தார். ஒன்றிய மகளிரணி தலைவி முருகானந்தி,மெய்யூர் கிளைச் செயலர் சண்முகவேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன்குடி ஒன்றிய தேமுதிக செயலர் நேசபுரம் செல்வகுமார்

    கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

     நிகழ்ச்சியில் மெய்யூர் அவைத் தலைவர் தங்கராஜ், துணைச் செயலர்கள் அன்வர், கெர்சன் பாக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai