Enable Javscript for better performance
மணல் கடத்தல்: 4 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    விளாத்திகுளம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 4 மாட்டு வண்டிகளை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

    மாசார்ப்பட்டி காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்பட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததைடுத்து,  காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையில், போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, அச்சங்குளம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 4 மாட்டு வண்டிகளைப்பறிமுதல் செய்து, அதனை ஓட்டி வந்த அச்சங்குளம் கீழத் தெருவைச் சேர்ந்த மூக்கையா மகன் ராஜேந்திரன்(35), நடராஜன் மகன் முருகன்(48) பால் மகன் மாரிமுத்து(37), வேடப்பட்டி மேலத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் இருளப்பசாமி(48) ஆகியோரைக் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai