Enable Javscript for better performance
மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தனித்திறன் போட்டி - Dinamani

சுடச்சுட

    

    மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தனித்திறன் போட்டி

    By கோவில்பட்டி  |   Published on : 26th August 2013 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தனித்திறன் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம், முதல்வர் சுப்புராஜ் மற்றும் கல்லூரியின் அறிவியல் மற்றும் கலையியல் துறை தலைவர் நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரியின் முன்னாள் மாணவரும், ஐ.பி.எஸ். அதிகாரியுமான கருப்பசாமி  போட்டிகளை தொடங்கிவைத்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, வாழ்த்து அட்டை தயாரித்தல், விநாடி-வினா, ஓவியம் வரைதல், எழுத்துப்பிழை தேனீ, கழிவிலிருந்து கலைப் பொருள்கள் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில், இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கழிவிலிருந்து கலை பொருள்கள் உருவாக்குதலில் முதல் பரிசையும், கோவில்பட்டி வி.எஸ்.கே.துரைசாமி நாடார் மெட்ரிக் பள்ளி 2-ம் பரிசு, சிவகாசி ஒய்.ஆர்.டி.வி. மெட்ரிக் பள்ளி 3-ம் பரிசும் பெற்றன. ஓவியம் வரைதலில் திசையன்விளை டேனியல் தாமஸ் மெட்ரிக் பள்ளி முதல் பரிசு, இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 2-ம் பரிசு, சாத்தூர் கே.சி.ஏ.டி. சிதம்பரம் ஞானகிரி மெட்ரிக் பள்ளி 3-ம் பரிசும் பெற்றன. வாழ்த்து அட்டை தயாரித்தலில் திசையன்விளை டேனியல் பள்ளி முதல் பரிசு, கோவில்பட்டி யு.பி. மெட்ரிக் பள்ளி 2-ம் பரிசு, கோவில்பட்டி இராவிள்ள கே.ஆர்.ஏ. வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 3-ம் பரிசும் பெற்றன. எழுத்துப்பிழை தேனீ போட்டியில் பத்தமடை ட்ரினிட்டி இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி முதல் பரிசு, மதுரை வேலம்மாள் மெட்ரிக் பள்ளி 2-ம் பரிசு, திருநெல்வேலி சங்கர்நகர் ஜயேந்திரா கோல்டன் ஜூபிலி மெட்ரிக் பள்ளி 3-ம் பரிசும் பெற்றன.

    போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.2ஆயிரம், 2-ம் பரிசு ரூ.1,500, 3-ம் பரிசு ரூ.1,000  வழங்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai