மார்க்க விளக்க பொதுக்கூட்டம்
By ஆறுமுகனேரி, | Published on : 26th August 2013 03:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர கிளை சார்பில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாவட்டச் செயலர் அய்யூப் தலைமை வகித்தார். காயல்பட்டினம் ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியின் கத்தீப் ஏ.அப்துல் மஜீத் உமரீயும், மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மத் அல்தாஃபீயும் சிறப்புரையாற்றினர். அமைப்பின் நகர துணைச் செயலர் அபூதாஹிர் நன்றி கூறினார்.