Enable Javscript for better performance
வனத்திருப்பதியில் இலவச மருத்துவ முகாம் - Dinamani

சுடச்சுட

    

    வனத்திருப்பதியில் இலவச மருத்துவ முகாம்

    By சாத்தான்குளம்  |   Published on : 26th August 2013 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வனத்திருப்பதியில் 2 நாள் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

    சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை,ராமச்சந்திரா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஹோட்டல் சரவணபவன் சார்பில் இலவச மருத்துவ முகாம் வனத்திருப்பதியில் நடைபெற்றது.

    ஹோட்டல் சரவணபவன் நிறுவனர் ராஜகோபால் தலைமை வகித்து முகாமை தொடங்கிவைத்தார். ராமச்சந்திரா மருத்துவமனை தலைவர் ஆனந்தன், இதய நலத்துறை மருத்துவர் தணிகாசலம்,முகாம் அமைப்பாளர் வைத்திசுப்பிரமணியன், மருத்துவர்  பிரியங்கா ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.  ராமானுஜம் ஜீயர் சுவாமிகள் அருளாசி வழங்கினார். ஞாயிற்றுக்கிழமையும் இரண்டாவது நாளாக முகாம்  நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai