Enable Javscript for better performance
வாலிபால் போட்டி: வள்ளியூர் அணி சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    வாலிபால் போட்டி: வள்ளியூர் அணி சிறப்பிடம்

    By சாத்தான்குளம்,  |   Published on : 26th August 2013 03:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதலூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் வள்ளியூர் பெட் பாலிடெக்னிக் கல்லூரி அணி முதல்பரிசு பெற்றது.

    சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூர் அடையல் புகளூர் அருள்மிகு பெருமாள்சாமி கோவில் கொடை விழாவையொட்டி ராஜா வாலிபால் கிளப் சார்பில் 5-ம் ஆண்டு மின்னொளி வாலிபால் போட்டிகள் 2 நாள்கள் நடைபெற்றன.

    இதில் வள்ளியூர் பெட் பாலிடெக்னிக் கல்லூரி அணி, அதிசயபுரம் அணி, திருநெல்வேலி சேவியர் கல்லூரி அணி, திசையன்விளை காமராஜர் அணி, சாத்தான்குளம் விவிவி அணி உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றன.

    போட்டிக்கு சாத்தான்குளம் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஏ.ஆர்.பி.டி. கல்யாண்குமார் தலைமை வகித்தார். வழக்குரைஞர் ஆட்லின் ஜெயசந்திரிகா முன்னிலை வகித்தார். போட்டிகளை தூத்துக்குடி மேயர் சசிகலாபுஷ்பா தொடங்கி வைத்தார்.

    இதில் வள்ளியூர் பெட் பாலிடெக்னிக் கல்லூரி அணி முதல் பரிசும், அதிசயபுரம் அணி 2-ம் பரிசும், திருநெல்வேலி சேவியர் கல்லூரி அணி 3-ம் பரிசும், திசையன்விளை காமராஜர் அணி 4-ம் பரிசும் பெற்றன. ஏற்பாடுகளை ராஜா வாலிபால் கிளப் தலைவர் டி. சுந்தர்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai