Enable Javscript for better performance
விநாயகர் சிலைகள் விசர்ஜனம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    விநாயகர் சிலைகள் விசர்ஜனம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

    By உடன்குடி,  |   Published on : 26th August 2013 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் மற்றும் விசர்ஜனம் செய்யப்படும் இடங்கள் குறித்து இந்து முன்னணி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் விநாயகர் சிலைகள் செப்.9-ல் பிரதிஷ்டை செய்யப்படும். செப்-11,12-ம் தேதிகளில் கீழ் குறிப்பிட்ட பகுதிகளில் விசர்ஜன நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    உடன்குடி,பரமன்குறிச்சி,மெஞ்ஞானபுரம் பகுதி விநாயகர் சிலைகள் அனைத்தும் 11-ம் தேதி உடன்குடி ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி முன்பிருந்து புறப்படும்.

    சாத்தான்குளம்,வெங்கடேசபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து புறப்படும் விநாயகர் சிலைகளுக்கு இந்து முன்னணி மாவட்டச் செயலர் பரமசிவன்,பாஜக ஆயுள் காலத்திட்ட தலைவர் ராஜக்கண்ணன், இந்து முன்னணி தெற்கு மாவட்டத் தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    குரும்பூர் பகுதியில் ஓடையூர் முருகேசன்,இந்து முன்னணி மாவட்டச் செயலர் சக்திவேல் ஆகியோர் தலைமையிலும், காயல்பட்டினத்தில் இந்து முன்னணி திருச்செந்தூர் ஒன்றியத் தலைவர் ஜெயசிங் முன்னிலையில் மாவட்ட துணைத்தலைவர் சுந்தரவேல் தலைமையிலும்,ஆறுமுகனேரி பகுதியில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு விநாயகர் ராமசாமி முன்னிலையில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையிலும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் திருச்செந்தூர் கடற்கரை வளாகத்தில் பூஜைகள் மற்றும் நிறைவு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    நிகழ்ச்சியில் பாஜக மாநிலச் செயலர் பழனிவேல்சுவாமி பேசுகிறார். பின்னர் விநாயகர் சிலைகளுக்கு ஆவர்த்தன பூஜையும்,விசர்ஜன நிகழ்ச்சியும் நடைபெறும்.

    ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தாமிரவருணி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படும். கருங்குளத்தில் 9-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு 12-ம் தேதி தாமிரவருணி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படும். கருங்குளத்தின் மற்றொரு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் 11-ம் தேதி திருச்செந்தூர் கடற்கரையில் விசர்ஜனம் செய்யப்படும்.

    ரெட்டார்குளம், பிள்ளையார்குளம்,முனைஞ்சிப்பட்டி,திருமலாபுரம் ஆகிய பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் திருச்செந்தூரில் 11-ம் தேதி விசர்ஜனம் செய்யப்படும்.

    புதுக்கோட்டை,சாயர்புரம்,முத்தையாபுரம்,முள்ளக்காடு ஆகிய பகுதிகளில் 15-ம் தேதி மாலையில் ஸ்பிக் நகர் கடற்கைரயில் விசர்ஜனம் செய்யப்படும். இதற்கு சாயர்புரம் இந்து முன்னணி பொறுப்பாளர் எட்வர்ட் தலைமை வகிக்கிறார். புதூர் விளாத்திக்குளம் பகுதியில் செப்.15-ம் தேதி வேம்பார் கடற்கரையிலும், புளியங்குளம் விநாயகர் சிலைகள் சிற்பிகுளம் கடற்கரையிலும் விசர்ஜனம் செய்யப்படும். நிகழ்ச்சிகளுக்கு விளாத்திக்குளம் செந்தில் தலைமை வகிக்கிறார்.கோவில்பட்டி பகுதியில் 11-ம் தேதி விநாயகர் ஊர்வலம் மற்றும் விசர்ஜன நிகழ்ச்சிகள் நடைபெறும்.  தூத்துக்குடி மாநகரில் அனைத்து வார்டுகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் 15-ம் தேதி சங்குமுகம் விநாயகர் கடற்கரையில் விசர்ஜனம் செய்யப்படும். இதில் பாஜக மாநில துணைத்தலைவர் எச்.ராஜா பேசுகிறார் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai