Enable Javscript for better performance
அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படக் கூடாது- Dinamani

சுடச்சுட

    

    அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படக் கூடாது

    By தூத்துக்குடி,  |   Published on : 27th August 2013 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எந்தவொரு விஷயத்திலும் அதிகாரிகள் தனிச்சையாக செயல்படக் கூடாது என்றும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி நடந்து கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார்.

     தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்  குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் எம். ரவிக்குமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் இரா. முத்து, குறைதீர்க்கும் பிரிவு அதிகாரி கமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கோவில்பட்டி கழுகாசலபுரத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்ற மூதாட்டி ஆட்சியரிடம் மனு அளித்தபோது, தனக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதால் ரேஷன் கடை மூலம் வழங்கப்பட்டு வந்த 20 கிலோ இலவச அரிசியை நிறுத்திவிட்டார்கள் என ஆட்சியரிடம் தெரிவித்தார்.

     இது தொடர்பாக உணவு வழங்கல் துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்ட ஆட்சியர் எம். ரவிக்குமார்,  முதியோர் உதவித் தொகை பெறுவோருக்கு ரேஷன் கடை மூலம் வழங்கப்படும் 35 கிலோ அரிசி மட்டுமே கிடையாது. 20 கிலோ அரிசி வழங்கப்பட வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளில் அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்படக் கூடாது. அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

     பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சி நிவாரணத் தொகை ஏறத்தாழ 95 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை இன்னும் ஒருவாரத்துக்குள் வழங்கப்பட்டு விடும். மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    புதுக்கோட்டை தட்டப்பாறை விலக்கு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடி தாற்காலிகமானதுதான். விமான நிலையம் அருகே நிரந்தர சுங்கச்சாவடி அமைப்பது தொடர்பாகவும், இடத்தைத் தேர்வு செய்வது தொடர்பாகவும் தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநருடன் ஆலோசனை நடத்த உள்ளேன் என்றார்.

     பின்னர், மாற்றுத் திறனாளிகள் துறை சார்பில் 5 பேருக்கு இலவச தையல் இயந்திரத்தையும், கடந்த 20 ஆண்டுகளாக விபத்தில்லாமல் வாகனம் ஓட்டிய சமூக பாதுகாப்புத் திட்டத்தில் வாகன ஓட்டுராகப் பணிபுரிந்த ஜெயராஜிக்கு சான்றிதழையும் ஆட்சியர் வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai