Enable Javscript for better performance
இலவச கண் பரிசோதனை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    :நாசரேத் மர்காசிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்புச் சங்கம், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பிரகாசபுரம் கிளை மற்றும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற முகாமை வங்கி கிளை மேலாளர் இருதய மகேஷ் தொடங்கி வைத்தார். அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் டாக்டர்கள் மேஹாபோசி, உப்சனா கதியியா ஆகியோர் தலைமையில் மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். மொத்தம் 150 பேர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 25 பேர் கண்புரை அறுவைச் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai