Enable Javscript for better performance
இலவச பட்டா மனைஆக்கிரமிப்பு:மீட்கக் கோரி பொதுமக்கள் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    இலவச பட்டா மனைஆக்கிரமிப்பு:மீட்கக் கோரி பொதுமக்கள் முற்றுகை

    By கோவில்பட்டி  |   Published on : 27th August 2013 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி அருகேயுள்ள சரவணாபுரம், கட்டாலங்குளம், ராமநாதபுரம், புதுப்பட்டி, ஆவுடையம்மாள்புரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 70 பேருக்கு அரசு வழங்கப்பட்ட இலவச பட்டா மனை ஆக்கிரமிக்கப் பட்டதை மீட்டுத் தரக் கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

    1997-ம் ஆண்டு வீடு இல்லாத பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்காக அப்போதைய மாவட்ட ஆட்சியரால் 70 பேருக்கு இலவசமாக மனை பட்டா வழங்கப்பட்டது.

    இதை சுமார் 15 ஆண்டுகளாக அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் ஆக்கிரமித்து, அந்த இடத்தை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சுத்தம் செய்து, விற்பனைக்கும் பயன்படுத்தி வருகின்றனராம்.

    அந்த இடத்தை அவர்களிடமிருந்து மீட்டுத் தரக் கோரி கட்டாலங்குளத்தைச் சேர்ந்த அய்யாசாமி, வழக்குரைஞர் முத்துகுமார் மற்றும்  50-க்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    அவர்கள் கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் கதிரேசனிடம் அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர், உரிய விசாரணை செய்து மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதால் அனைவரும் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai