Enable Javscript for better performance
கழிவுநீர், நச்சுத் தொட்டி சுத்தம் கோவில்பட்டியில் விழிப்புணர்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கழிவுநீர், நச்சுத் தொட்டி சுத்தம் கோவில்பட்டியில் விழிப்புணர்வுக் கூட்டம்

    By கோவில்பட்டி  |   Published on : 27th August 2013 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கழிவுநீர் நச்சுத் தொட்டியை சுத்தம் செய்வதற்கு கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் வரதராஜ் தலைமை வகித்தார். பொறியாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர் ராஜசேகரன் வரவேற்றார்.

     கூட்டத்தில், நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள், கல்வி நிறுவனங்கள், விடுதிகள் மற்றும் வணிக வளாகங்கள், உணவகங்கள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள், அனைத்து கட்டட உரிமையாளர்களும் தங்கள் கட்டடத்தில் உள்ள கழிவுநீர் நச்சுத் தொட்டியை நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்ட டேங்கர் லாரி மூலம் சுத்தம் செய்கின்றனர்.

    அந்த பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் கண்டிப்பாக பாதுகாப்புச் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும்.

    சுத்தம் செய்வதற்கு முன் நகராட்சியில் அனுமதி பெற வேண்டும். பாதுகாப்பற்ற முறையில் கழிவுநீர் நச்சுத் தொட்டியை சுத்தம் செய்தால், கட்டட உரிமையாளர்கள் உரிமம் ரத்து செய்யப்படும்.  ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், அதற்கு அந்த கட்டட உரிமையாளர்களே முழு பொறுப்பாவார்கள்.மேலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என விழிப்புணர்வு கூட்டத்தில் கூறப்பட்டது. கூட்டத்தில், தொழிலதிபர்கள் ராஜகுரு, ராஜேந்திரன் உள்பட சுகாதாரத் துறை ஊழியர்கள்,அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai