Enable Javscript for better performance
காவல் துறைக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம்- Dinamani

சுடச்சுட

    

    காவல் துறைக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

    By கோவில்பட்டி  |   Published on : 27th August 2013 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி பகுதிகளில் சட்டம்-ஒழுங்கை மேம்படுத்தவும், திருட்டுகளை ஒழிக்கவும், பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என ஏ.எஸ்.பி. முரளிரம்பா கூறினார்.

    கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றிய ராஜேந்திரன் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, புதிய ஏ.எஸ்.பி.யாக முரளிரம்பா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்தில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல், சட்டம்-ஒழுங்கு பிரச்னை, திருட்டுகளை அறவே ஒழிக்க காவல்துறையோடு பொதுமக்களும் இணைந்து செயலாற்ற வேண்டும். பொதுமக்கள், எந்தவித அச்சமுமின்றி காவல்துறையோடு நண்பர்களாகப் பழக வேண்டும். எந்த பிரச்னை என்றாலும் எந்நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

    முரளிரம்பா ஆந்திர மாநிலம் விஜயநகரத்தைச் சேர்ந்தவர். 2011-ம் ஆண்டில் ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்ட இவர், சேலத்தில் ஏ.எஸ்.பி. பயிற்சி முடித்து விட்டு, முதன்முதலாக கோவில்பட்டியில் ஏ.எஸ்.பி.யாக பொறுப்பேற்றுள்ளார்.

    இவர் ஏற்கெனவே குரூப் 1 தேர்வு மூலம் துணைக் கண்காணிப்பாளர் பதவியிலும், ஐ.ஆர்.எஸ். தேர்வில் வெற்றி பெற்று தில்லி மத்திய கலால் வரித் துறையில் அதிகாரியாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai