Enable Javscript for better performance
குடிநீர் தொட்டி அடிக்கல் நாட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    :உடன்குடி அருகே குமாரலட்சுமிபுரத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

     ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு செட்டியாபத்து ஊராட்சி துணைத் தலைவர் ரா.குணசேகர் தலைமை வகித்தார். உடன்குடி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் சி.குணசேகரன் அடிக்கல் நாட்டினார்.

    செட்டியாபத்து ஊராட்சி மன்ற உறுப்பினர் வேம்படிமுத்து,உடன்குடி ஒன்றிய முன்னாள் அதிமுக செயலர் செல்லப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai