Enable Javscript for better performance
சுற்றுலாத் துறையை மேம்படுத்த சிறப்புக் குழு- Dinamani

சுடச்சுட

    

    சுற்றுலாத் துறையை மேம்படுத்த சிறப்புக் குழு

    By ஸ்ரீவைகுண்டம்,  |   Published on : 27th August 2013 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுற்றுலாத் துறையை மேம்படுத்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தெரிவித்தார்.

    ஆழ்வார்திருநகரியில், பேரூராட்சி தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு, திருச்செந்தூர் கோட்டாட்சியர் கொங்கன் தலைமை வகித்தார். பேரூராட்சித் தலைவர் ஆதிநாதன் வரவேற்றார். சுற்றுலாத் துறை அமைச்சர் சண்முகநாதன் அங்கன்வாடி கட்டடத்தை திறந்து வைத்து பேசியதாவது:

    சுற்றுலாத் துறையின் மூலம் இரட்டைதிருப்பதி கோவிலுக்கு ரூ. 1.5 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாத் துறையை மேம்படுத்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

    விழாவில் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத் தலைவர் விஜயகுமார், துணைத் தலைவர் ராஜ் நாராயணன், பேரூராட்சி துணைத் தலைவர் ஜெயராஜ், டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்ரீனிவாசன் சேவா அறக்கட்டளையின் ஆலோசகர் முருகன், ராஜப்பா வெங்கடாச்சாரி, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித் தலைவர் அருணாசலம், ஆழ்வார்திருநகரி ஒன்றிய அதிமுக செயலர் சேக்தாவூது, துணைச் செயலர் செந்தில் ராஜ்குமார், நகரச் செயலர் ஜெயராஜ், கருங்குளம் ஒன்றிய அதிமுக செயலர் சிவசுப்பிரமணியன் மற்றும் ஆழ்வார்திருநகரி பேரூராட்சி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் செ.கலாவதி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai