Enable Javscript for better performance
தமிழகத்தில் பாஜகவுடன் எக் கட்சியும் கூட்டணி வைக்காது -காதர் மொகிதீன்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் பாஜகவுடன் எக் கட்சியும் கூட்டணி வைக்காது -காதர் மொகிதீன்

    By ஆறுமுகனேரி,  |   Published on : 27th August 2013 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுடன் எந்தவொரு கட்சியும் கூட்டணி வைக்காது என நம்புவதாக முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

    காயல்பட்டினத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

    பாஜக உள்பட எந்தவொரு கட்சியும் முஸ்லிம் லீக்கிற்கு விரோத கட்சியல்ல. கேரளத்தில் ஆட்சி அமைத்துள்ளோம். மத்தியில் கூட்டணியில் உள்ளோம். பாஜக சிவில் கோடு மற்றும் இந்து ராஜ்யம் பற்றி பேசுவதைத்தான் முஸ்லிம் லீக் எதிர்க்கிறது. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடி, தான் இந்துதேச வாதி என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.   தமிழகத்தில் 11 ஆயிரம் பள்ளிவாசல்கள் உள்ளன.அதில் உள்ள மஹல்லா ஜமாஅத்திற்கு கட்டுப்பட்டு முஸ்லிம்கள் நடந்து வருகின்றனர். கட்டாயப் பதிவுச் சட்டம் கொண்டு வந்தபின், கடந்த திமுக ஆட்சியில் படிவம் 1ஏ வில் பூர்த்தி செய்து பள்ளிவாசல் இமாம் மூலம் 3 மாதத்தில் சமர்ப்பிப்பதை அரசு ஏற்றுக் கொண்டது.

     ஆனால், கடந்த 5 மாதங்களாக மணமக்கள் மற்றும் திருமணம் நடத்தியவர்கள் வரவேண்டும் என பதிவு அலுவலகத்தில் கட்டாயப்படுத்துகின்றனர். பள்ளிவாசல்களில் உள்ள இமாம்கள் மூலம் கொடுக்கும் படிவம் 1ஏ-வை  ஏற்றுக் கொள்ள அரசை கேட்டுக் கொள்கிறோம். பல ஆண்டுகளாக பள்ளிவாசல்களில் இஸ்லாமிய திருமணத்தைப் பதிவு செய்கின்றனர். இப் பிரச்னையை அரசு கவனத்திற்கு கொண்டு வர செப்டம்பர் 28-ல் திருச்சி மாநில பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்க உள்ளோம்.

     மேலும் டிசம்பர் மாதத்தில் அனைத்து பள்ளிவாசல்கள் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு மாநாடு நடத்த உள்ளோம். இஸ்லாமிய திருமணச் சட்டம் பற்றி மாவட்ட தலைநகரங்கள் மற்றும் நகரங்களில் கருத்தரங்கங்கள் நடத்தி வருகிறோம்.

     கடந்த ஜூலை 7-ல் காயல்பட்டினத்திலும் கடந்த 22-ல்  பென்னேரியிலும் நடைபெற்ற இக் கருத்தரங்குகளை தொடர்ந்து டிசம்பர் மாதம் வரை தமிழகம் முழுவதும் நடத்த உள்ளோம் என்றார் அவர்.

    பேட்டியின்போது முஸ்லிம் லீக் நகரத் தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மது நாஸர், மாவட்டச் செயலர் முஹம்மது ஹஸன், நகரச் செயலர் ஏ.எல்.அபூசாலிஹ், மாவட்டத் துணைத் தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai