Enable Javscript for better performance
தூத்துக்குடியில் லாரி ஓட்டுநர் கொலை: இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் லாரி ஓட்டுநர் கொலை: இருவர் கைது

    By தூத்துக்குடி  |   Published on : 27th August 2013 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக லாரி ஓட்டுநரைக் கொலை செய்து, சடலத்தை எரிக்க முயன்றதாக அவரது நண்பர்கள் இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

     தூத்துக்குடி ஓம்சக்திநகர் 2-வது தெருவைச் சேர்ந்த முனுசாமி மகன் காளிமுத்து (24). டேங்கர் லாரி ஓட்டுநர். வேலைக்குச் சென்ற காளிமுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு வரை வீடு திரும்பவில்லையாம். இதை யடுத்து, முனுசாமி தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

     இந்நிலையில், தூத்துக்குடி கேவிகே நகர் காட்டுப் பகுதியில் பாதி எரிந்த நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாகக் கிடப்பதாக சிப்காட் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட எஸ்.பி. மா. துரை, டி.எஸ்.பி. நாராயணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

     விசாரணையில், கொலை செய்யப்பட்டிருப்பது காளிமுத்து என்றும் அவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட பிறகு, அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக உடல் எரிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக போலீஸார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  கடந்த ஆண்டு நடைபெற்ற விநாயகர் சதூர்த்தி விழாவின்போது ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக கொலை செய்யப்பட்ட காளிமுத்துவுக்கும், அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் சரத்பாவுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

     இந்த பிரச்னை காரணமாக காளிமுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் சரத்பாபு, அவரது நண்பர் ராஜாமணி ஆகியோரை சிப்காட் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

     கைதான சரத்பாபு மீது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தனகுமாரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai