Enable Javscript for better performance
பட்டதாரி ஆசிரியர் கழகக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

    ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, மாவட்டச் செயலர் விஜயகுமரன் தலைமை வகித்தார். ஜனகராஜ் முன்னிலை வகித்தார். சுந்தர ராஜன்,பாலமுருகன், வெங்கடா சலபதி ஆகியோர் பேசினார். எம்.பில். படிப்புக்கு ஊக்க ஊதிய உயர்வு பழைய முறையிலேயே வழங்க வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலகங்களில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் பணப்பலன்கள் கால தாமதமின்றி உடனே கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாவட்டத் துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலர் தங்கமாரியப்பன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai