Enable Javscript for better performance
பாஞ்சாலங்குறிச்சி, ஆதனூரில் இன்று அம்மா திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பாஞ்சாலங்குறிச்சி, ஆதனூரில் இன்று அம்மா திட்ட முகாம்

    By ஓட்டப்பிடாரம்,  |   Published on : 27th August 2013 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சி,ஆதனூர் வருவாய்க் கிராமங்களில் (ஆக. 27) செவ்வாய்க்கிழமை அம்மா திட்டம் நடைபெறுகிறது.

     ஓட்டப்பிடாரம் வட்டத்தில் பாஞ்சாலங்குறிச்சி, ஆதனூர் ஆகிய கிராமங்களில் அம்மா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் பாஞ்சாலங்குறிச்சியில் வட்டாட்சியர் மு.ராமகிருஷ்ணன், ஆதனூரில் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் காளிமுத்து ஆகியோர் தலைமையில் பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு அன்றே சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

    பொதுமக்கள் இதைப் பயன்படுத்தி சாதி, வருமானச் சான்று உள்ளிட்டவைகளுக்கு தகுந்த ஆதாரங்களை மனுக்களுடன் இணைத்து பெற்றுக் கொள்ளலாம் என வருவாய்த் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai