Enable Javscript for better performance
மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு - Dinamani

சுடச்சுட

    

    மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு

    By தூத்துக்குடி  |   Published on : 27th August 2013 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     

    தூத்துக்குடியில் சாலையைக் கடக்க முயன்றபோது  மோட்டார் சைக்கிள் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

     தூத்துக்குடி முத்தம்மாள்காலனி 8-வது தெருவைச் சேர்ந்தவர் ஜோசப் பொன்னையா (55). இவர், தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். பொருள்கள் வாங்குவதற்காக திங்கள்கிழமை காலை டபுள்யூஜிசி சாலையில் உள்ள பள்ளிவாசல் அருகே தனது வாகனத்தை நிறுத்திவிட்டு ஜோசப் பொன்னையா சாலையைக் கடக்க முயன்றாராம்.

     அப்போது, அந்த வழியாகச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் ஜோசப் பொன்னையாவும், மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த முத்தையாபுரத்தைச் சேர்ந்த முனியசாமியும் காயமடைந்தனர். இதில், ஜோசப் பொன்னையா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். முனியசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

     இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிந்த மத்திய பாகம் போலீஸார் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பாரதிநகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை (35) கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai