Enable Javscript for better performance
விஜயகாந்த் பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூரில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

      ஒன்றிய தே.மு.தி.க. சார்பில் தேரடி திடலில்  நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலர் என்.சண்முகராஜா தலைமை வகித்தார். நகரச் செயலர் எஸ்.சேகர், ஒன்றிய மீனவரணிச் செயலர் ஜென்சன், ஒன்றிய அவைத் தலைவர் பூச்சிக்காடு சுரேஷ், நகர அவைத் தலைவர் கே.ராமன், சார்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விழாவில் மாநில தொண்டரணி துணைச் செயலர் வி.எஸ்.முருகன் மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களை வழங்கினார்.

    மாநிலப் பேச்சாளர் மாரிமுத்தமிழன், தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ஆறுமுகநயினார், மாவட்ட இளைஞர் அணிச் செயலர் உமரி சத்தியசீலன், மாவட்ட விவசாய அணிச் செயலர் பாலமுருகன், நகர மகளிரணிச் செயலர் பன்னீர்செல்வி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஆனந்தராஜ், லட்சுமணன், கனகசபாபதி, தாமோதரலிங்கம், செந்தில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக ஒன்றிய பொருளாளர் வழக்குரைஞர் அபுதாஹீர் வரவேற்புரையாற்றினார். நகர பொருளாளர் மு.வீரமணி நன்றி கூறினார். ஏற்பாடுகளை திருச்செந்தூர் ஒன்றிய தேமுதிகவினர்  செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai