Enable Javscript for better performance
ஸ்ரீ ராகவேந்திர சுவாமி ஆராதனை விழா- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீராகவேந்திர சுவாமியின் 35-வது ஆண்டு ஆராதனை விழா கோவில்பட்டியில் நடைபெற்றது.

    இதையொட்டி காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீரங்கம் ப்ரம்ம ஸ்ரீராமசந்திரபாகவதர் மற்றும் கோவில்பட்டி பஜனாம்ருத மண்டலியினரின் தலைமையில் சிறப்பு பஜனை மற்றும் அபிஷேகம், சுமங்கலி பூஜை, ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் ஸ்ரீசத்யசாயி சேவா சமிதி குழுவினரின் பஜனை நடைபெற்றது. இரவில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டு,உற்சவம் நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீசத்குரு ராகவேந்திர சுவாமி ஆராதனை கமிட்டி கோவில்பட்டி கிளைத் தலைவர் நடராஜ அய்யர் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai