Enable Javscript for better performance
ஓய்வுபெற்ற சாலைப்பணியாளருக்கு வெட்டு: தொழிலாளி கைது- Dinamani

சுடச்சுட

    

    ஓய்வுபெற்ற சாலைப்பணியாளருக்கு வெட்டு: தொழிலாளி கைது

    By சாத்தான்குளம்,  |   Published on : 28th August 2013 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் அருகே ஓய்வுபெற்ற சாலைப்பணியாளரை வெட்டியதாக தொழிலாளியை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

    சாத்தான்குளம் அருகேயுள்ள அறிவான்மொழியைச் சேர்ந்தவர் தி. சுயம்பு (63). இவர் சாலைப்பணியாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்றபின் ஊராட்சியில் நடைபெற்று வரும் நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    அதில் பணி செய்வது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த சு. முருகானந்ததுக்கும், சுயம்புக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.

    இந்நிலையில் திங்கள்கிழமை இரவு சுயம்பு அங்குள்ள கடை முன் நின்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த முருகானந்தம் , சுயம்புவை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.  இதில் காயமடைந்த சுயம்பு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலைய சிறப்பு உதவி- ஆய்வாளர் மதிபாலன் வழக்கு பதிவு செய்து முருகானந்தத்தை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai