Enable Javscript for better performance
குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

    By ஓட்டப்பிடாரம்  |   Published on : 28th August 2013 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

      மேலமடம் கிராமத்தில் குடிநீர் கிடைக்காததால், 150-க்கும் மேற்பட்ட பெண்கள் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

    ஓட்டப்பிடாரம் ஊராட்சிக்கு உள்பட்ட மேலமடம் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் கிடைக்கவில்லையாம். இக்கிராமத்துக்கு ஆழ்குழாய் கிணறுகள் உள்ள புதியம்புத்தூர் மலர்குளம், ஓட்டப்பிடாரம் கோழிப்பண்ணை மற்றும் சீவலப்பேரிக் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவற்றில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்ததாம்.

    இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இப்பகுதி மக்களுக்கு சீராக குடிநீர் கிடைக்கவில்லையாம். இதனால் மக்கள் குடம் ஒன்றுக்கு ரூ. 5 கொடுத்து தண்ணீர் வாங்கி வந்தார்களாம்.

    இதற்கிடையே குடிநீர்த் தட்டுப்பாடு மேலும் அதிகரித்ததால் உடனடியாக குடிநீர் வழங்கக் கோரி மேலமடம் கிராமத்தைச் சேர்ந்த 150 பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி உறுப்பினர் முருகேஸ்வரி தலைமையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.

    புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai