Enable Javscript for better performance
சீரான குடிநீர் விநியோகம் கோரி ஆர்ப்பாட்டம் - Dinamani

சுடச்சுட

    

    சீரான குடிநீர் விநியோகம் கோரி ஆர்ப்பாட்டம்

    By கோவில்பட்டி  |   Published on : 28th August 2013 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி நகருக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் சீனிவாசன் தலைமை வகித்தார். மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அண்ணாத்துரை, மாவட்டச் செயலர் அர்ச்சுணன், மாநிலக் குழு உறுப்பினர் மல்லிகா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜோதிபாசு, முத்துராஜ், முத்துலட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினர் விஜயலட்சுமி, நகரக் குழு உறுப்பினர்கள் முருகன், சர்க்கரையப்பன், டேனியல் மற்றும் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai