Enable Javscript for better performance
திருச்செந்தூரில் தேவர் மகா சபைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூரில் தேவர் மகா சபைக் கூட்டம்

    By திருச்செந்தூர்  |   Published on : 28th August 2013 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

      திருச்செந்தூரில் தமிழக காருகுறிச்சி தேவர் மகாஜன சங்க மகா சபைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு சங்க துணைத் தலைவர் ஆர்.சின்னத்துரை தலைமை வகித்தார். செயலர் ஆர்.எம்.சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில் பிளஸ் 2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சூலைவாய்க்கால் எ.முருகேசன், கோவை என்.சின்னத்துரை, சென்னை இ.முத்து, முன்னாள் செயலர் ஆர்.சீனிவாசபாண்டியன், குரும்பூர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  முன்னதாக திருச்செந்தூர் பி.சங்கரலிங்கம் வரவேற்றார்.

    சங்கப் பொருளாளர் பி.என்.ராஜா ஆண்டறிக்கை மற்றும் வரவு- செலவு அறிக்கை வாசித்தார். செயற்குழு உறுப்பினர் ஆனந்த் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். துணைச்செயலர் டி.மாரியப்பன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai