Enable Javscript for better performance
தூத்துக்குடியில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கு: இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கு: இருவர் கைது

    By தூத்துக்குடி,  |   Published on : 28th August 2013 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் இருவரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

    தூத்துக்குடி குமாரர் தெருவைச் சேர்ந்த மாடசாமி மனைவி சுந்தரி (28). இவர், கடந்த மாதம் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் பயிலும் குழந்தைக்கு மதிய சாப்பாடு கொடுத்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பாகம்பிரியாள் தெருவில் அவர் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் திடீரென சுந்தரி கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் நகையை பறித்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சுந்தரியிடம் நகைப் பறித்ததாக தூத்துக்குடி அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் புதூரைச் சேர்ந்த மோகன் மகன் மணிகண்டன் (22), மதுரை சிந்தாமணிநகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுரேஷ்குமார் (22) ஆகிய இருவரையும் போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

    கைதான இருவரிடம் இருந்தும் மூன்றரை பவுன் நகை மீட்கப்பட்டது. மேலும், தென்பாகம் காவல் நிலையப் பகுதியில் நடைபெற்ற நகைப் பறிப்பு சம்பவத்திலும் இருவருக்கும் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai