Enable Javscript for better performance
தூத்துக்குடியில் வாகன காப்பகத்துக்கு சீல்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் வாகன காப்பகத்துக்கு சீல்

    By தூத்துக்குடி,  |   Published on : 28th August 2013 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் நீண்ட நாள்களாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு வரி செலுத்தாத நான்குசக்கர வாகனக் காப்பகத்துக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.

    தூத்துக்குடி சிவன் கோவில் அருகே கீழரதவீதியில் கார் மற்றும் வேன் போன்ற வாகனங்கள் நிறுத்தும் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தை அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி நடத்தி வருகிறார்.

    மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாமல் இந்த வாகனக் காப்பகம் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்

    படுகிறது. 

    இந்நிலையில், மாநகராட்சி வருவாய் அலுவலர் சந்திரமோகன், உதவியாளர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது, மூன்றாண்டுக்கும் மேலாக வரி பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது. மாநகராட்சி நிர்வாகம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வாகனக் காப்பக உரிமையாளர் ராமசாமி வரிபாக்கி வைத்திருந்ததால் காப்பகத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் சீல் வைத்தனர். நிலுவை இல்லாமல் வரி செலுத்தி முறையான அனுமதி பெற்ற பிறகே வாகன காப்பகம் நடத்த வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai