Enable Javscript for better performance
பெண்ணை தாக்கிய கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    பெண்ணை தாக்கிய கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

    By கோவில்பட்டி  |   Published on : 28th August 2013 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டியில் பெண்ணை தாக்கிய கணவர் உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.

    கோவில்பட்டி இந்திரா நகர் வெற்றி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த இருதயராஜ் மகன் பீட்டர்அந்தோனிசாமி. இவருக்கும், ராதாபுரம் வட்டம், வடக்கன்குளம் மாதாங்கோவில் அருகேயுள்ள தேவசகாயம் மகள் ஆரோக்கியமேரிஜெஸிந்தாவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததாம்.

    திருமணத்தின் போது சீதனம் உள்பட ரொக்கப்பணம் அளித்தார்களாம். இந்நிலையில் அவர், மேலும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினாராம். இதையடுத்து, ஆரோக்கியமேரிஜெஸிந்தா வடக்கன்குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டாராம்.

    இந்நிலையில், 13-6-2013 அன்று கோவில்பட்டியில் பீட்டர்அந்தோனிசாமி வீட்டிற்கு வந்த ஆரோக்கியமேரிஜெஸிந்தாவை அவரது கணவர் பீட்டர்அந்தோனிசாமி மற்றும் அவரது சகோதரி சாந்தி அவரது கணவர் சந்திரன் ஆகியோர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் பெண்ணை தாக்கியதாக கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து,  தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai