Enable Javscript for better performance
பைக் - மினி லாரி மோதல்: இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை பைக்கும் மினி லாரியும் மோதியதில், இளைஞர் இறந்தார்.

    கோவில்பட்டி அருகே உள்ள முதலிப்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை மகன் வினோத்குமார் (27) அதே ஊரைச் சேர்ந்த முருகன் மகன் சுரேஷ் (22), கார்த்திக் மகன் குமார் (16) ஆகிய மூவரும் பைக்கில் கோவில்பட்டியில் இருந்து முதலிப்பட்டிக்கு சென்றுக் கொண்டிருந்தனராம். வரதம்பட்டி விலக்கு அருகே வந்தபோது, பெருமாள்பட்டிக்கு சென்றுக் கொண்டிருந்த மினி லாரியும், பைக்கும் மோதியதாம். இதில், பைக்கில் வந்த 3 பேரும் காயமடைந்தனர்.  காயமடைந்த 3 பேரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுரேஷ் இறந்தார். மற்ற இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து, மினி லாரி ஓட்டுநரான, கடலையூர் பால்பண்ணைத் தெருவைச் சேர்ந்த காளிமுத்து மகன் மாரியப்பனிடம்  (30) விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai