Enable Javscript for better performance
மனைவியைக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் சிறை- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி அருகே மனைவியைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட தொழிலாளிக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள சிவசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் வேல் கணியான் (48). இவரது மனைவி சுகிலா (43). வேல்கணியான் கோவில் கொடை விழாக்களில்  கணியான் ஆடும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், வேல்கணியானுக்கு மதுப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால்,  தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

    இந்நிலையில் 1.2.2012- அன்று ஏற்பட்ட தகராறின்போது சுகிலாவை அடித்துக் கொலை செய்ததாக வேல் கணியானை ஆழ்வார்திருநகரி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரபுதாஸ் குற்றம்சாட்டப்பட்ட வேல்கணியானுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 500 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai